Saturday, July 31, 2010

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,

படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயற்றியவர் : புலமைப்பித்தன்
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா.



உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

ஏ.... ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரி ராரோ ஆரி ராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ

பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா
.

Friday, July 30, 2010

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா

படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை : இசைஞானி இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து



ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ
.

Thursday, July 29, 2010

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

படம் : பயணங்கள் முடிவதில்லை
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : இளையராஜா





தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
.

Wednesday, July 28, 2010

நானே நானா யாரோ தானா ?

பாடியவர் : வாணி ஜெயராம்
இசையமைத்தவர் :இளையராஜா
பாடலாசிரியர் : வாலி




நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

.

Tuesday, July 27, 2010

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்



வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா - வான் நிலா

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா- - வான் நிலா

தெய்வம் கல்லிலா ? ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்நிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா.. - வான் நிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதை சொல்வாய் வெண்ணிலா.- வான் நிலா

.

Monday, July 26, 2010

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

படம் : புவனா ஒரு கேள்விக்குறி
எழுதியவர் : பஞ்சு அருணாசலம்
இசை : இளையராஜா
குரல் : S.P. பாலசுப்ரமண்யம்



விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....

.

Sunday, July 25, 2010

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

பாடல்: என்னுள்ளே எங்கோ
படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இசைஞானி இளையராஜா




என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?

உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா(!)....

ஏன் நிறுத்திட்டீங்க(!)?....

இங்க ஒரு அழான இடம் இருக்கு...
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா...

என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ... ஆ... ஆ... ஆ.......
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையி லே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?

மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ... ஆ... ஆ...
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ?

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

Wednesday, July 21, 2010

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

திரைப்படம் : ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடல் : டி.ராஜேந்தர்



வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...


பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
.
.

Tuesday, July 20, 2010

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்

படம் : கல்லுக்குள் ஈரம்
பாடியவர்கள் : எஸ் ஜானகி இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா





சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்

விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் தயிரானது உன் நினைவுகள்

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

.

Monday, July 19, 2010

விழியே விழியே பேசும் விழியே

படம்: ஈரம்
பாடல்: விழியே விழியே பேசும் விழியே
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்



விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

(மழையே..)

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

மை மை மழையே

உன் ஆடைப்ட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைகிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது

(விழியே..)
.

Sunday, July 18, 2010

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது

படம்: தில்லு முல்லு
இசை: எம் எஸ் விஸ்வனாதன்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்





ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது

(ராகங்கள்)

கலைமாது தான்மீட்டும் இதமான வீணை
கனிவான சுவரம் பாடப் பதமானது
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுருதி கொண்ட வீணையம்மா

(ராகங்கள்)

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடிபோல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராகபாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா

(ராகங்கள்)

Saturday, July 17, 2010

கண்ணாம்மூச்சி ஏனடா..

பாடல்: கண்ணாமூச்சி ஏனடா
குரல்: சித்ரா
வரிகள்: வைரமுத்து




கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)

அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

Friday, July 16, 2010

நீல வான ஓடையில்........

படம் : வாழ்வே மாயம்

வரிகள் : கங்கை அமரன்
இசை : இசைஞானி
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்




நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

(நீல)

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி (2)
நீ இல்லையே நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்

(நீல)

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியிலே கோபமோ விரகமோ தாபமோ
தேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நாந்தான்

(நீல)

Thursday, July 15, 2010

அழகூரில் பூத்தவளே…




அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மலையூரில் சாரலிலே..
என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே….


நீயுடுத்தி போட்ட உடை… என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி… மோதிரமாய் ஆகுமடி
இமையாலே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க… இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே
என்னை திரியாக்கி… உன்னில் விளக்கேற்றி
என்னாளும் பார்த்திருப்போம்

ஹோய்.. ஹோய்..
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…

நீ முறிக்கும் சோம்பலிலே… நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்
நீ  இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி

அறியாமல் நான் இருக்க.. அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூறுமடா

என்னை மறந்தாலும்… உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்

ஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் மலையூரின் சாரலிலே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே

உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்
உயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன்

.

Wednesday, July 14, 2010

கண்ணே..கலைமானே

பாடல் : கண்ணே கலைமானே

வரிகள் : கண்ணதாசன்

இசை : இளையராஜா

குரல் : கே.ஜே.யேசுதாஸ்





Kanne kalaimane kanimayilene
kanden unai naane.. (2)
andhi pagal unai naan parkiren.
aandavanai idhai thaan kedkiren
raariraro... oraariro...
kanne kalaimane .

oomai endral oruvaagai amaidhi..
ezai endral adhil oru amaithi..
neeyo kilippedy .. pan padum
aanandha kuyipedu...
eno dheivam sadhi seithadhu,
pethai pola vidhi seithathu ...
kanne kalaimaane

kaadhal konde kanavinai valarthen
kanmani unai naan karuthinil ninaithen
unakke uyiraanen ennalum
enai nee maravaathe....
nee illamal edhu nimmadhi
neethan endrum en sannadhi..
kanne kalai mane





தகிடததுமி தகிடததுமி தந்தானா ....

படம் : சலங்கை ஒலி
இசை : இசைஞானி
பாடியவர் : எஸ்.பி.பி
வரிகள் : வைரமுத்து




தகிடததுமி தகிடததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்

நீ தொடங்கும் போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழ்நீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து

இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம்(Baavam) உண்டு பாவம்(paavam) இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

.

Tuesday, July 13, 2010

மடை திறந்து... தாவும் நதியலை நான்

படம் : நிழல்கள்
குரல் : S P பாலசுப்ரமணியம்.
இசை : இளையராஜா
 

 
மடை திறந்து... தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்...
நினைத்தது பலித்தது.......

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
கானம் விளைந்தது.. நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...(2)
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் ... நான்.......(மடை திறந்து)

நேற்றின் அரங்கிலே... நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே.. நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் (2)
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
-எனக்கே தான்...........(மடை திறந்து)

.

Monday, July 12, 2010

ஆங்க்கோ மே தேரி ...ஓம் ஷாந்தி ஓம் - ஹிந்தி

படம் : ஓம் சாந்தி ஓம்
இசை : விஷால் -ஷேகர்


கனவுகளே ஆயிரம் கனவுகளே

படம் : நீதிக்கு தலை வணங்கு

பாடியவர்கள் : டி.எம்.எஸ், பி.சுசிலா





ஹும்ம்.. ம்ம்ம் ம்ம்ம்... ஒஹோ... ஹோ... ஹோ ...ஓ



கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச்சொல்லுங்கள்

கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவுகளே ஆயிரம் கனவுகளே

காதல் தேவனின் தூதர்களே
என் காதலனை கொஞ்சம் வர விடுங்கள்
கொஞ்சம் வர விடுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே

நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ

முகம் என்று அதற்கொரு தலைநகரோ
கைகள் மூடிய கோட்டை கதவுகளோ
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அதில் இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அதில் இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே

அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே

கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவுகளே ஆயிரம் கனவுகளே

நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே
அதில் நித்திரை இரவுகள் எரியட்டுமே
நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே
அதில் நித்திரை இரவுகள் எரியட்டுமே
காதலில் கவிதைகள் வளரட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே


கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை கொஞ்சம் வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வர விடுங்கள்

Sunday, July 11, 2010

ஆஏ ஹோ மேரி சிந்தஹி...

Singer : Alka Yagnik
Lyrics: Sameer
Music Director: Nadeem Shravan



Aye ho meri zindagi me tum ba har banke
Mere dil me yuhi rahena tum pyar pyar banke
Ankho me tum base ho sapne hazar banke
Mere dil me yuhi rahena tum pyar pyar banke

Mere sathi mere sajaan mere saath yuhi chalna
Badle ga raang zamana par tum nahi badalna
Meri maang yuhi bharna taare hazar ban ke
Aye ho meri zindagi me tum bahar banke

Mere dil me yuhi rahena tum pyar pyar banke
Agar me jo rooth jao to tum mujhe manana
Thama hai haath mera phir umar bhar nibhana
Mujhe chod ke na jana waade hazar karke

Aye ho meri zindagi me tum bahar banke
Mere dil me yuhi rahena tum pyar pyar banke
Ankho me tum base ho sapne hazar banke
Mere dil me yuhi rahena tum pyar pyar banke

எண்ட எல்லாம் எல்லாம் வல்லே. -மீச மாதவன் (மலையாளம்)

படம் : மீஷ மாதவன்
இசை : வித்யாசாகர் 
 




Ente ellam ellam alle..
ente chellotha chembarunthalle
ayyo
ninte kaalile kaana pathaswaram njanalle njannalle..
thae achan kelkum..
ninte maarilae maaya chandana pottenikkale ennikkalle..
ae..
ayyada...ae...poda!

Ente ellam ellam alle..
ente chellotha chembarunthalle
ayyo pathukae
ninte kaalile kaana pathaswaram njanalle njannalle..
ninte maarilae maaya chandana pottenikkale ennikkalle..

Kilingaa kingini chepe...chirikaa chembaka motae..
pinangaan enthanenthaane...hoy hoy hoy hoy
minungaan enthanenthane...enthaane...
mayangaan enthaane enthaane enthaanee...

Ente ellam ellam alle..
ente chellotha chembarunthalle
ninte kaalile kaana pathaswaram njanalle njannalle..
ninte maarilae maaya chandana pottenikkale ennikkalle..

minnaminnum thulamminnal minnaram njaan korkaam..
viyarthirikumbam veeshithanukaan mekhavishariyundaakam..
munnaarilae moovanthiyil muthaaramaay maaramm..
mullanilaavathe minnum ariviyaal mutharinjaanam theerkaam..

ninnodu mindilla njan ninnodu kootilla njaan
ninnodu mindilla njan ninnodu kootilla njaan
karalilae kallan neeyallae...
pinangaan enthanenthaane..enthaane..mayangan enthanenthaane..enthaane

Ente ellam ellam alle..
ente chellotha chembarunthalle
ninte kaalile kaana pathaswaram njanalle njannalle..
ninte maarilae maaya chandana pottenikkale ennikkalle..

illaveyil chilladayaal ponmaaridam moodaam..
muthani meyyilae munthiri cheppilae vettila chellam thedam..
kaana konil kathaan nilkum kaarthika thaaram vaaraaam..
kaathil minnungum kammalinullillae kallu pathikaan poraam...
nin thooval thottilla njan..nin chundil mutheela njan...
nin thooval thottilla njan..nin chundil mutheela njan...

kanavile kallan njaanallae...
pinangaan enthanenthaane..enthaane..mayangan enthanenthaane..enthaane

Ente ellam ellam alle..
ente chellotha chembarunthalle
ayyo pathukae..
ninte kaalile kaana pathaswaram njanalle njannalle..
ninte maarilae maaya chandana pottenikkale ennikkalle..

Kilingaa kingini cheepe...chirikaa chembaka motae..
pinangaan enthanenthaane...hoy hoy hoy hoy
minungaan enthanenthane...enthaane...
mayangaan enthaane enthaane enthaanee...

கரிமிழி - மீச மாதவன் (மலையாளம்)

படம் : மீஷ மாதவன்,
இசை : வித்யாசாகர்
மலையாளம்




Karimizhi kkuruviye kandeela nin chirimani chilaboli ketteela
Nee pande ennodonnum mindeella (2)

Kaavil vanneela pooram kandeela
Maaya kaikottum melavum ketteela
Nee pande ennodunnum mindeela

Aaanachandam ponnambalchamayam nin naanachimizhil kandeela
Kaanakkadavil ponnoonjal padiyil..nin oonachinthum ketteela

Ooo…kalappurakkolayil nee kaaathu ninnela..
Marakkuda konil melle meyyolicheela
Paattonnum paadella paalthulli peytheella.. (2)
Nee pande ennodonnum mindeella………..(2)
Mindeela …nee pande ennodonum mindeela… (Karimizhi)

Eeerenmaarum en maaril minnum eee maaramarukil thotteela
Neelakkannil nee nithyam vekkum eee ennathiriyaay minneela
Mudichurul choodinullil nee olicheela
Mazhathazha paaya neerthi nee vilicheela
Maamunnan vanneela maarodu chertheela (2)
Nee pande ennodonnum mindeela.. (Karimizhi)

Friday, July 9, 2010

நான் பூவெடுத்து வெக்கனும் பின்னால...

படம் : நானும் ஒரு தொழிலாளி

இசை : இளையராஜா
பாடிவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம்



நான் பூவெடுத்து வெக்கனும் பின்னால...
அதில் வஞ்சி இப்போ சொக்கனும் தன்னாலே
உன் மச்சான் மச்சான் ஏ மல்லிய வச்சான்
உன் மச்சான் மச்சான் மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சி....

நான் பூவெடுத்து... நான் பூவெடுத்து...
வெக்கனும் பின்னால...

அதில் வஞ்சி இப்போ சொக்கனும் தன்னாலே


அத்தே மவன் சொன்னதும் ஒத்துக்கனும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகந்தான் சுகந்தான் - 2

தென்பழனி சந்தனம் தான் இங்க ஒரு பெண்ணாச்சா..
என்னென்னவோ எண்ணமும் தான் என்னை கண்டு உண்டாச்சி

உன் முந்தானைய இழுக்கட்டுமா
சும்மா இரு
ஒரு முத்தாரத்தை பறிக்கட்டுமா
கொஞ்சம் பொறு

அடி பூவே பொண்ணே கண்ணே இங்கே வா......ஹோய்..

நீ பூ வெடுத்து வெக்கனும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கனும் தன்னாலே

*****.
பத்துவிரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
வருதா வருதா -2


தென்னங்கில தென்றல தான் பின்னறது அங்கே தான்
செவ்வழலி சேலக்கட்டி மின்னுருது இங்கே தான்

இரண்டு கண்ணால நீ அளக்கறது
உன் மேனி தான்
என்ன கண்டாலுமே கொதிக்கறது
உன் மேனி தான்

அட மச்சானுக்கு பொண்ணு இங்கே தான்..

நீ பூ வெடுத்து வெக்கனும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கனும் தன்னாலே
என் மச்சான் மச்சான் ஏ மல்லிய வச்சான்
என் மச்சான் மச்சான் மல்லிய வச்சான்
வச்சதுல என்னவோ உண்டாச்சி....

நீ பூ வெடுத்து வெக்கனும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கனும் தன்னாலே

Wednesday, July 7, 2010

பூவாடைக்காற்று


படம் : கோபுரங்கள் சாய்வதில்லை

பாடியவர் : ஜானகி, சுரேந்தர்




பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ
பூவாடை காற்று ... ல ல ல ல ல..
வந்து ஆடை தீண்டுமே... ல ல ல ல
முந்தானை இங்கே.... ல ல ல ல
குடையாக மாறுமே.... ல ல ல ல

பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
இது தானே மோகம் ... பபப்பா...
ஒரு பூவின் தாகம்... பபப்பா...
குடையோடு நனையாதோ பூங்காவனம்.

..... பூவாடை காற்று.........

ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு என்று
இரு கண்ணின் ஓரம்..... பபாப்பா
நிறம் மாறும் நேரம் ... பபாப்பா
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்.

..... பூவாடை காற்று.............

சங்கத்தில் பாடாத கவிதை

படம் : ஆட்டோ ராஜா

வரிகள் : வாலி

இசை : இளைய ராஜா






Tamil Sangathil Paadadha Kavidhai - Idhai
Angathil yaar Thandadhu
Sandathil Maradha Nadayudan En munne Yaar Vandadhu

Kai enre Sengandhal Malarai
Nee sonnAl Naan nambavo
Kaal enre sevvalai idhalai
Nee sonnal Naan nambavo
Mai konjam
Poi konjam
Kannukkul Nee kondu varuvai
Kaalathaal Moovadha oru Tamil


Anthipor kaanaadha ilamai
aadattum En kaigalil
Sindithen senthoora idhalgalil
Sindithen Paiginra Uravai

Anthipor kaanaadha ilamai
aadattum En kaigalil
Sindithen senthoora idhalgalil
Sindithen Paiginra Uravai
Konjam thaa konjathaaaaaaaaa
aaaaaaaaaaaahaaaaaaaaaa
Kannukkul ennena Nalinam
Kalathaal Moovadha UyarTamil


Lalallllllaaaaaa rarAlalala rara

Aadai En unmeni alagai
Aadhikkam seiginradhu
Naalaikke aanandha Vidudhalai
kaanattum kaanaddha uravil
Kai Thottum Mei Thottum
Kobathil Thoongadha Viliyum
Sandippil eNNenna Nayam Tamil

Sangathil Padatha Kavidhai
Tamil Sangathil Paadadha Kavidhai Angathil yaar Thandadhu
Sandathil Maradha Nadayudan En munne Yaar Vandadhu


விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே.

படம்:உரிமைக்குரல்

இசை:மெல்லிசை மன்னர்
இயக்கம்:ஸ்ரீதர்
வரிகள்:கண்ணதாசன்




விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்


(விழியே கதை எழுது...)

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி

படம் : சொக்கத்தங்கம்

இசை : தேவா



என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி

ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

கண்கள் இரண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகே
குங்குமத்தை புரட்டி எடுத்த குண்டு மல்லி சரமே..
மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்கு

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சி
உன் கண்ணில் பட்டிருக்கு நின்னாச்சி

கண்கள் இரண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தை புரட்டி எடுத்த குண்டு மல்லி சரமா..
மந்த மாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
உன் கண்ணில் பட்டிருக்கு நின்னாச்சி
***
எத்தன மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும்

எத்தன வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும்..

கச்சைக்கட்டி பூ பூத்த பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே

பத்து விரல் போதாது உன் மோகமே
லட்ச விரல் நீ கொண்டு வா வானமே

என் முத்து மணி சுடர் முல்லை மலர் திடல் நாணுவதேன்..

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சி
உன் கண்ணில் பட்டிருக்கு நின்னாச்சி
****

முக்கனி அதில் முக்கியம் கொண்ட அந்த
முதல் கனி முதல் கனி பார்த்து விட்டேன்

பத்தினி பெண்ணின் பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்

பூர்வ ஜென்மம் ஓர் பந்தம் நீ வந்தது
என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது

தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது
என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது

ஒன் வெள்ளை மனசிலும்
வெட்க சிரிப்பிலும்வாழ்ந்திருப்பேன்..

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

கண்கள் இரண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா

குங்குமத்தை புரட்டி எடுத்த குண்டு மல்லி சரமா..
மந்த மாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சி
உன் கண்ணில் பட்டு இங்கு நின்னாச்சி

*********

பூ மாலையில் ஓர் மல்லிகை

படம் :ஊட்டி வரை உறவு

இசை :எம் எஸ் விஸ்வனாதன்
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்




ஆ ஆ ஆ...


ஆ ஆ ஆ...


பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது


சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)

(பூ மாலையில்)


மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ...
மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

(பூ மாலையில்)

கங்கைக் கரைத் தோட்டம்

படம்: வானம்பாடி

வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்




கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓஓ...கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்

கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!

(கங்கைக்கரை)

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்


கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!

அன்று வந்த கண்ணன் அவன்
இன்று வர வில்லை அவன்!
என்றோ அவன் வருவான்...ஓ...என்றோ அவன் வருவான்!

கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை


கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ!
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!!

கண்ணா...!!கண்ணா...!!கண்ணா...!!

காதல் தேசம் = எனைக் காணவில்லையே நேற்றோடு

படம் : காதல் தேசம்

இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : எஸ்.பி.பி



அன்பே அன்பே அன்பே அன்பே

எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு

உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே அன்பே

கோரஸ் : தடை போடும் பூங்காற்றே பூங்காற்றே

ஆ : வா வா

கோ : என் வாசல் தான்

ஆ : வாழ்வேனே நான்

ஆ : ஆகாரம் இல்லாமல் நான் வாழ கூடும்
கண்ணே உன் பெயரை சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நானல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூட தீ தான்
உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்


பளிங்குனால் ஒரு மாளிகை

படம்: வல்லவன் ஒருவன்

இசை: வேதா
பாடியவர்: LR ஈஸ்வரி





பளிங்குனால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...

(பளிங்குனால்..)

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்து மல்லிகை வாடை

(இருப்பதோ..)

திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு

உறவு.. உறவு..

உறவு.. உறவு..

(பளிங்குனால்..)


நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்

(நாளை..)

காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்

முடியும்.. முடியும்..

முடியும்.. முடியும்..

(பளிங்குனால்..)

Tuesday, July 6, 2010

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

படம் : வறுமையின் நிறம் சிகப்பு
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் : எஸ்பிபி பாலசுப்ரமணியம் எஸ் ஜானகி



பாடல் வரிகள்...

தந்தன தத்தன தைய்யன தத்தன தான தத்தன தான தையன்ன தந்தனா
ஓ ஓ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
ல ல ல ல ல ல லா ல ல ல லா
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

எப்படி

சந்தங்கள் ன ன நீயானால்
ரீசரி சங்கீதம் ம்ம்ம் நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

னன னன னனா னனா
comeon sweet once again
னன னன னனா னனா
சிரிக்கும் சொர்க்கம்
தர னன னன தர்ர ர னன னன
தங்க தட்டு எனக்கு மட்டும்
தானே தானே தான
தேவை பாவை பார்வை
தத்தன தான்ன
நினைக்கவேய்த்து
லால்ல லல்லா ல ல
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
ன ன ன ன ன ன தனன்ன ல ல ன ன
beautiful
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சந்தங்கள் ஹா ஹா நீயானால் ஹா ஹா
சங்கீதம் ஹா ஹா நானாவேன் ஹா ஹா

இப்ப பார்க்கலாம்

தனன்ன தனன்ன ன ன
மழையும் வெயிலும் என்ன
தன்னானன தனன்ன ன ன
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனன்னான தனன்னான தன்னா
தனன்னானன தனன்னானன தான
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்

கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்

படம் : நினைத்தாலே இனிக்கும்

பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்




எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்


கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ


எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
காலம் சல்லாபக் காலம் ஓ உலகம் உல்லாசக் கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும் ஹ உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்


தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயர பறந்து கொண்டாடுவோம்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
காலை ஜப்பானில் காபி மாலை நியுயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி இனிமேல் நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்

உலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவு பொழுது நமதுப்பக்க்கம் விடிய விடிய கொண்டாடுவோம்
கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை

ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

ஆடை இல்லாத மேனி ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி
இன்றோ அது ஒரு ஹாபி ஹொ எல்லோரும் இனிமேல் பேபி
வெட்கம் துக்கம் தேவையில்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டும் கமான் எவ்ரபடி
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும் ஜாயின் மீ ஹா
ஹோ ஹோ ஹா ஹா

தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை

ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ


எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கமான் எவ்ரபடி ஜாயின் டுகெதர்

ஹ .. ஹ .. ஹ.. ஹ

ஹ .. ஹ .. ஹ.. ஹ

ஹ .. ஹ .. ஹ.. ஹ