படம் : வேட்டையாடு விளையாடு
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே
(வெண்ணிலவே)
பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்
பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம்வந்து
குறுகுறு மின்னலென குறுக்கே ஓடுதே
(வெண்ணிலவே)
(மஞ்சள் வெயில்)
(தயக்கங்கள் விலகுதே)
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
ஹே யாரோ யாரொ யாரோ அவன்
ஒரு காலும் காலும் வெட்டிக்கொள்ள
இருதண்டவாளம் ஒட்டிச்செல்ல
(வெண்ணிலவே)
இன்னும் கொஞ்சம் நீளவேணும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையொ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி
நின்றுபார்க்க நேரமின்றி
சென்றுகொண்டே இருந்தேனே
நிற்கவைத்தாள் பேசவைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி
.
1 comment:
mmm... ithu konjam sumarthan..
just like that..
Post a Comment