Thursday, September 30, 2010

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்

படம் : கல்லூரி
பாடியவர்கள் : ஹரிசரண், ஹரிணி சுதாகர்
இசை : ஜோஷுவா ஸ்ரீதர்
வரிகள் : நா.முத்துகுமார்



உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சைக் கேட்கிறேன் பதி சொல்லிடவில்லை

உன் கண்கள் மீது ஒரு பூட்டு
வைத்துப் பூட்டும்போதும்
உன் இதயம் தாண்டி
வெளியே வருமே பெண்ணே
நீ பயணம் போகும் பாதை
வேண்டாமென்று சொல்லும்போதும்
உன் கால்கள் வருமே
வருவதை தடுத்திட முடியாது

என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்
இது அன்பால் விரைகிற அவஸ்தைகளா
இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா
இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன்
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடும் பகலோடும் என்னை எரிக்க

கனவினில் தினம் தினம் பூத்திடும் பூக்களை
கைகளில் பறித்திட ஒளிந்திடுமா
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே மெல்ல மீறிடுமா
உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றி தெரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொன்ன ரகசியமாய்
என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும்

Monday, September 27, 2010

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு

படம் : ஜெண்டில்மென்
வரிகள் : வைரமுத்து
குரல்: ஷாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா
இசை : ஏ.ஆர்.ஆர்



உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - உன்
ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாகச் செல்லேண்டி - உன்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி
குதிபோட்டு வந்தேண்டி
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி

கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மையா வெக்கும் சாக்க வெச்ச கையா வெப்பே தெரியாதா
அலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சி முடிச்ச கையில் மயிலப் புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தொகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளதாச்சி
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
உருவித்தான் பாக்காதே - என்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
துருவித்தான் கேட்காதே
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி

வெடலப்பொண்ணு நுனிநாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்துக் கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்புச் செல எடவெளியில் எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆசைப்பட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்
(உசிலம்பட்டி)
.

Sunday, September 26, 2010

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் ..

படம் : சட்டம்
இசை : கங்கை அமரன்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, எஸ்.பி.பி



அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரனும் தரனும்
என் தேவைகள்
அடி ராதா தெரியாதா இளம் போதை
தெரியாத தொடராதா உன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் மொழி ராதா ஆஆஆஆ

அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி
நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நல் இரவும் பூஜைகள் தானே

அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரனும் தரனும்
என் தேவைகள்

ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த
ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அ..பி..ஷேகம் நடத்த

நீ வாங்க வந்த வரமென்னவோ
நீ தானே காட்சி தரவேண்டுமோ

நான் பார்க்க மனம் சேர்க்க
அருள் சேர்க்க வா ஈஸ்வரி

அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி

புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க
புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க

குழலோடு வந்த கோபாலன் நான் தான்
கோபாலன் பாடும் பூபாளம் நீ

உன்னை பார்க்க நான் சேர்த்து பாராட்ட
வா மன்னவா ஆஆஆஆ

அம்மம்ம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரனும் தரனும்
என் தே..வை..கள்

நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்

கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் மொழி ராதா.. தா.. தா.

லல்லா லலலா லல்லா
லல்லா லலலா லல்லா

Saturday, September 25, 2010

ஒன்னம் கிளி பொன்னாங் கிளி - கிளிசுந்தன் மாம்பழம்

Movie : Kilichundan Mambazham
Singer: M.G.Sreekumar, Sujatha
Music : Vidya Sagar



Onnamkili ponnamkili Vannankili maavinmel..
randamkili kandu kothikondu varavundapol
moonaamkili naalam kili ennaathathilera kili
angadu kothingadu kothaay....
kilichundan maampazhamaey kili kotha thenpazhamey
thalir chundil poothiri muthay chippiyil enne kaathuvecho...

Onnamkili ponnamkili Vannankili maavinmel..
randamkili kandu kothikondu varavundapol
moonaamkili naalam kili ennaathathilera kili
angadu kothingadu kothaay....
kilichundan maampazhamaey kili kotha thenpazhamey
thalir chundil poothiri muthay chippiyil enne kaathuvecho...

nee maranno poyoru naal eerila pol naam iruper
othupalleel othuchernnu aeriyanall
poyathallae...
nee maranno poyoru naal eerila pol naam iruper
othupalleel othuchernnu aeriyanall
poyathallae...
annu nee kadichu paathi thannu ponnukinavin kannimaanga..
orthirinnu kaathirunnu jeevithammaake neeridumbol...
ne swapnathuruthaay pachathuruthaay...swapnathurumbay kalbilirunnu....

kilichundan maampazhamaey kili kotha thenpazhamey
thalir chundil poothiri muthay chippiyil enne kaathuvecho...

Onnamkili ponnamkili Vannankili maavinmel..
randamkili kandu kothikondu varavundapol
moonaamkili naalam kili ennaathathilera kili
angadu kothingadu kothaay....


neechirikkum chundilaakey chelukal pootha naalu vannu
then puralum mullu pole naam arijaathya vembalode....

innu maanchuda pol pollidunnu nee kadamthannorumma ellam..
pozhimee nee maranju ikare njan oraannizhalay...
nee vannedunaal ennithudangi kaanukalangi...

kilichundan maampazhamaey kili kotha thenpazhamey
thalir chundil poothiri muthay chippiyil enne kaathuvecho...

Onnankili ponnankili Vannankili maavinmel..
randamkili kandu kothikondu varavundapol
moonaamkili naalam kili ennaathathilera kili
angadu kothingadu kothaay....
kilichundan maambazhamaey kili kotha thenpazhamey
thalir chundil poothiri muthay chippiyil enne kaathuvecho...

Friday, September 24, 2010

ஞானப் பழத்தைப் பிழிந்து



ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா..!

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..!

உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது
என்று நாணித்தான் முருகா!

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவது
என்று நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை...!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!

அப்பனித் தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லையாதலால்..

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே!
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

முருகா உனக்குக் குறையுமுளதோ?
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

முருகா நீ...
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..!
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்

தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி..!

தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே..!

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!
பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!

சபைதன்னில்
திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!

கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!

ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!

கார்த்திகைப் பெண்பால் உண்டாய்!
திருக்கார்த்திகைப் பெண் பாலுண்டாய்!

உலகன்னை அணைப்பாலே
திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!

தாயுண்டு! மனம் உண்டு..!!
தாயுண்டு! மனம் உண்டு..!

அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு
உன் தத்துவம் தவறென்று சொல்லவும்

ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு ..!
ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு..! ஈசனிடம் நாடு..!! இன்முகம் காட்டவா நீ..!!!
ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்..

என்னுடன் ஓடி வா நீ..!
என்னுடன் ஓடி வா நீ..!

Thursday, September 23, 2010

பாட்டும் நானே பாவமும் நானே

படம்: திருவிளையாடல்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கவி கா.மு.ஷெரீப்



பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே

(பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ

(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு

(பாட்டும்)

Wednesday, September 22, 2010

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா

படம்: திருவிளையாடல்
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: பாலமுரளீகிருஷ்ணா



ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா

புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா

ராகமா சுகராகமா கானமா தேவகானமா
என் கலைக்கு இந்த திருநாடு சமமாகுமா

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்டப் பின்னாலே அவர் மாறுவார்

அழியாத கலையென்று எனைப் பாடுவார்
எனையறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கானடா என் பாட்டுத் தேனடா
இசை தெய்வம் நானடா

Tuesday, September 21, 2010

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை

படம் : படகோட்டி
பாடியவர்: டி.எம்.எஸ்
இசை : எம் எஸ் வி



நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொருமெனி பொழுதொருவன்னம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

பவள கொடியே வா
சிந்தாமணியே வா
மணிமேகலையே வா
மங்கம்மாவே வா

நான் ஒரு குழந்தை -

ஊரறியாமல் உறவறியாமல்
யார் வர சொன்னார் காட்டுக்குள்ளே
ஓடிய கால்களை ஓட விடாமல்
யார் தடுத்தார்கள் உன்னை வீட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானும் அழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

பவள கொடியே வா
சிந்தாமணியே வா
மணிமேகலையே வா
மங்கம்மாவே வா

நான் ஒரு குழந்தை -

Monday, September 20, 2010

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

படம் : குழந்தையும் தெய்வமும்
பாடியவர் : பி. சுசுலா
இசை : எம்.எஸ்.வி



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று

நடந்தது எல்லாம் நினைப்பது எல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும்........

பிறந்தவந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது

வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகி சென்றது

குழந்தையும் தெய்வமும்........

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது.....

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசி கலந்துவிட்டால் கோபம் மாறி நேசம் ஆகுது

குழந்தையும் தெய்வமும்........

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவர் ஆனார்
அந்த பெரியவர்கள் கோபத்தினால் சிறியவர் ஆனார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகள் எல்லாம்
என்றும் கண் எதிரிலே கானுகின்ற தெய்வகள் ஆனார்

குழந்தையும் தெய்வமும்....

Sunday, September 19, 2010

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை..

படம்:அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, வாணிஜெயராம்
பாடலாசிரியர்:வாலி



குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன

மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு
மேனிமீது எழுதும் மணல்தான் உறவு
தலையிலிருந்து பாதம் வரையில்
தழுவி கொள்ளலாம்
அதுவரையில் நான்...அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைகடலில்தான் அலையும் படகோ

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ

காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல
எவரும் இல்லையே
பிறர் அறியாமல்...பிறர் அறியாமல்
பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது

வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயமாகும் இனிய வீணை நான்
ஸ்ருதி விலகாமல் இணையும் நேரம்
சுவை குறையாமல் இருக்கும் கீதம்

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு
இரண்டும் வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ

Saturday, September 18, 2010

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்

படம் : பகலில் ஒரு இரவு
இசை : இளைராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்




குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் (2)
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

(பொன்னாரம்)

மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிரிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)

சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)

Friday, September 17, 2010

செவ்வானமே பொன்மேகமே

படம் : நல்லதோர் குடும்பம்
இசை : இசைஞானி
பாடியவர்கள் : டி.எம்.எஸ், சுசிலா



செவ்வானமே பொன்மேகமே
செவ்வானமே பொன்மேகமே
தூவுங்கள் மலர்கள் கோடி
சொல்லுங்கள் கவிதை கோடி

இது சிங்காரக்குயில்கள் சங்கீதம் பாடும் உல்லாச நேரமன்றோ
இளம் சில்லென்ற காற்று உள்ளென்று பாயும் சல்லாப நேரமன்றோ

செவ்வானமே பொன்மேகமே...

பக்கம் வர வெட்கம் என்ன அம்மாடி வா இங்கே
ஊடல் கலை இங்கே கூடல் கலை அங்கே
என்னாளுமே கல்யாண நாள் செந்தூர சீமாட்டி வா
என்னாளுமே கல்யாண நாள் செந்தூர சீமாட்டி வா

செவ்வானமே பொன்மேகமே...

லல்லா லல்லா..லா லா லா...
லல்லா லல்லா..லா லா லா...

நாளைக்கென மிச்சமின்றி சொல்லட்டுமா ஒன்று
னனனா னனனா னனனா னனனா...

காதல் கடல் மீது ஓடம் விடும் நேரம்
என்னென்னவோ எண்ணங்களே
என்னென்னவோ எண்ணங்களே
சொல்லாமல் சொல்லட்டுமா

Thursday, September 16, 2010

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்

படம் : நல்லதோர் குடும்பம்
இசை : இசைஞானி
பாடியவர்கள் : சுசிலா, டி.எம்.எஸ்



சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்

மஞ்சள் மலர் பஞ்சனைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோவை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்

தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக்கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்

வானவெளியில் நிதம் நிதம்
சோலைவெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா..

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்

Wednesday, September 15, 2010

சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே

படம்: இங்கேயும் ஒரு கங்கை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பி.சுசீலா



ஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆ ஆ.. ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
கண்ணாளனைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே

ஓ.. ஓ.. ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓ..
கண்ணா.. ஜோடிக் குயில் மாலையிடுமா.. இல்லை ஓடிவிடுமா
கண்ணே.. நானிருக்க சோகமென்னம்மா.. கங்கை வற்றிவிடுமா
உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமா.. கச்சேரியா.. தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது.. கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
என் தேவியைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே

உன்னை மீறி ஒரு மாலை வருமா.. சொந்தம் மாறிவிடுமா
உள்ளம் காத்திருந்து இற்றுவிடுமா.. தன்னை விற்றுவிடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதியில்லையா.. எந்நாளும் காதலுக்கு நீதியில்லையா

சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே

Tuesday, September 14, 2010

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி

படம்: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்.
பாடியவர்: எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா.
இசை: இளையராஜா.



என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா...அன்பால் கூடவா ...
ஓ...பைங்கிளி ...நிதமும்

(என்னைத் தொட்டு )

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
அன்பே ஓடி வா ...
அன்பால் கூடவா ...
அன்பே ஓடி வா ...அன்பால் கூடவா .(2)..
ஓ...பைங்கிளி...நிதமும்

என்னைத் தொட்டு ...
நெஞ்சைத் தொட்டு ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆ ஆ ஆ அ ....ஆ ஆ ஆ ஆ ஆ அ ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...
கட்டுக்குள்ளே நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...
என்னில் நீயடி ...
உன்னில் நானடி ...
என்னில் நீயடி . ..உன்னில் நானடி ...
ஓ பைங்கிளி... நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...

Monday, September 13, 2010

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி
இசை : இசைஞானி
படம் : வருஷம் 16



பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

(பழமுதிர்ச்)

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகல் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

(பழமுதிர்ச்)

பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட

(பழமுதிர்ச்)

Sunday, September 12, 2010

ஏ ஐய்யாசாமி அட நீ ஆளக்காமி

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி
இசை : இசைஞானி
படம் : வருஷம் 16



ஏ ஐய்யாசாமி அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா

(ஏ ஐய்யாசாமி)

நாணல் பூத்தாடும் நதியின் ஓரம்
நானும் உன்னோடு நடக்கும் நேரம்
சோலைப் பூங்காற்று சிந்துகள் இங்கே பாட
மாலைப் பொன்வெய்யில் மனதினிலாட
தொட்டதத் தொட்டுத் தானாட தோளில் இந்த மானாட
இன்பம் இங்கே உச்சம் என்று கண்டால் கூட மிச்சம் உண்டு

(ஏ ஐய்யாசாமி)

அத்த மக ராசத்திக்கு நெத்திலி மீனு வேணாமா
நித்தம் நித்தம் கொழம்பு வெச்சி நாளும் சிக்கனு ஆமாமா
ஓடம் விட்டு ஆத்துக்குள்ள வலை எரிஞ்சு பாப்போமா
கூடத்துல அத்த மக கையில் கொண்டு சேப்போமா
தந்தனத் தானன தந்தனத் தானன ஏ ஏ ஏ

வாரம் நாலாச்சு முழுசாத் தூங்கி
உறக்கம் போயாச்சு விழியை நீங்கி
நேத்து ராப்போது சந்திரன் வந்த நேரம்
நீயும் இல்லாது மனதினில் பாரம்

(ஏ ஐய்யாசாமி)

Saturday, September 11, 2010

பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு

இசை : இசைஞானி
படம் : வருஷம் 16
குரல்: சுசீலா
வரிகள்: வாலி



பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகல் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இன்னேரம்

(பூப்பூக்கும் மாசம்)

வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தாள் இனித்திடும் வாழ்வு நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
ஊ ஊ ஊ...

(பூப்பூக்கும் மாசம்)

நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதற்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஊ ஊ ஊ...

(பூப்பூக்கும் மாசம்)
.

Friday, September 10, 2010

பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு

படம் : கிழக்கு வாசல்
பாடியவர்: பாலசுப்ரமணியம்
இசை : இசைஞானி



பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு
குத்தந்கொர ஏது நீ நந்தவனத் தேறு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹாய்

(பச்ச மல )

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ naan புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹாய்

(பச்ச மல )

மூணாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பாத்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மல )

Thursday, September 9, 2010

வசந்த கால கோலங்கள்

படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர் : ஜானகி



வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)

அலையில் ஆடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குள் என்ன உறவுகள்

உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

தேரில் ஏறும் முன்னரே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

Wednesday, September 8, 2010

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

படம்: கண்ட நாள் முதல்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: சுபிக்‌ஷா & பூஜா



கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
ஆ.. கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

Tuesday, September 7, 2010

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்

இசை : இசைஞானி
படம் : சலங்கை ஒலி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி



நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
ராகங்களே...அ அ அ அ ஆ...பழகுவதே...அ அ அ அ ஆ...
ராகங்களே பழ்குவதே பாவங்களே கலையசைவே
குழலொடு உயர்வுகள் இணைகின்ற தவமிது

(நாத)

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரனன திரனன திரதிர திரதிர

(நாத)
.

Monday, September 6, 2010

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

படம் : புது கவிதை
பாடியவர்கள் : கே.ஜே. ஜேசுதாஸ்,எஸ்.ஜானகி
இசை : இசைஞானி



வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதறு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

கங்கை வெள்ளம் பாய்ம்போது கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
மனங்களின் நிறம் பாத்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூத்தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

ஆ..ஆ..ஆ…
ஆ…ஆ..ஆ…
பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தனை மீறுமே
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே
வரையரைகளை மாற்றும்போது
தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சாரமே
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதறு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
லாலா லலலல லாலா லாலால லா…

Sunday, September 5, 2010

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை : இசைஞானி



ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் - பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

மெளனமே சம்மதமென்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு (ரோஜா)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனத கிளையில் பூவானேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன் ...நான் (ரோஜா)

Saturday, September 4, 2010

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

படம் :தேன் சிந்துதே வானம்
இசை :வி குமார்
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி



உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே

(உன்னிடம்)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
குழலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்)

*இந்த பாடலுக்கு வேறு விடியோ கிடைக்கவில்லை.

Friday, September 3, 2010

சாந்து பொட்டு...சந்தன பொட்டு...

படம் : தேவர் மகன்
இசை : இசைஞானி
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்



சாந்து பொட்டு...சந்தன பொட்டு...
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா

சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்
சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்
எத்தனயோ நாடு சுத்தி வந்த ஆளு
புத்தி இருக்கு சக்தி இருக்கு

ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும்
அன்பான உள்ளம்தான் உள்ளவரு
யாராச்சும் முட்டின மோதினா போச்சு
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹா

எங்கிட்ட தான் போட்டி போடுறவன் வேட்டி
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்

சூராதி சூரரும் தீரரும் யாரு
கோதாவில் ஒத்தையா நிக்கிறவரு
வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா
சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறவரு

கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உள்ள சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொறந்தா
அப்போ இவன் யாருன்னு புரியும் அட
படபடவென அடிக்கட்டுமா
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா
அத்திரி பச்சா கத்திரி பச்சா
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க
ஒன் இடுப்புல போடுற போடுல
ஒக்காத்தி உன்ன நான் முக்காடு போட வப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா

கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஹோய்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் ஹோய் ஹோய் ஹோய்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா
.

Thursday, September 2, 2010

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

படம் : சொல்ல துடிக்குது மனசு
இசை : இசைஞானி
பாடியவர் : ஜேசுதாஸ்



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே)

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே)

Wednesday, September 1, 2010

ரகசியமானது காதல் மிகமிக...

படம் : கோடம்பாக்கம்
இசை : சிற்பி
பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி



ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
(ரகசியமானது காதல்)

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல
(ரகசியமானது காதல்)