Thursday, November 18, 2010

உனக்குள் நானே உருகும் இரவில்

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்



மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)
ஓஓஓஓ...

தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)
(சிறுகச் சிறுக)
.

No comments: