Saturday, November 20, 2010

கட்டான கட்டழகு கண்ணா

படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்



கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா

நடை போடு நடை போடு
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே உன்
இடையோடு இடையோடு கொடிபோல உள்ளம்
விளையாட வந்த நிலவே

கட்டான கட்டழகு கண்ணா

விளையாடு நீ விளையாடு
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே பொன்
வளையோடு வளையோடு இசைபாடும் கையில்
வளைந்தாட வந்த கலையே

பட்டாடை கட்டி வந்த மைனா

பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா நீ வா
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா சிறு
நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா காதல்
நோய் தந்த பெண்மையே வா

மதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா வாவா
மதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா நாம்
அறியாத பூமியில் தெரியாத பாதையில்
இரு பேரும் போகலாம் வா நாம்
இரு பேரும் போகலாம் வா

ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
.

4 comments:

logu.. said...

mmm..nallathanirukku..

logu.. said...

sogapattu ean podrathe illa..
evlo arumaiyana songs irukku?
thedi pudichu podungalen.

Music Mix said...

Thodarnthu paadalgalai kettu, support saivathuku nandri

soga pattu podugikrom..

அப்பாதுரை said...

இப்பத்தான் இந்தப் பாடல்கேட்கிறேன்/பார்க்கிறேன்... இனிமை.