திரைப் படம்: தேடி வந்த மாப்பிளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா & TM.சௌந்தர ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
(மாணிக்க தேரில்..)
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
(மாணிக்க தேரில்..)
மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம் என் தோட்டம்
(மாணிக்க தேரில்..)
தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக
புது மழை போலே நீரோட
அதிசைய நதியில் நானாட
நீயாட …. ஆஹா .. தேனோட…
(மாணிக்க தேரில்..)
ஓ..ஓ..ஓ…… ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
.
1 comment:
enna..enna.. enna oru pattu..
hats off...
Post a Comment