திரைப்படம்: கரகாட்டக் காரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
மானே மயிலே ம்ரகதக் குயிலே தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே
ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்குந்தேர் போல ஆனேன்
பூப்பூத்த சொலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு
குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சுத் தவிசசேனே நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு தெக்குக் காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனந்தாடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி மாமா
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
.
1 comment:
hayyo..
sad song.. i like very much.
sema song..
Post a Comment