Thursday, August 19, 2010

சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல

படம்: மலையூர் மம்பட்டியான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி



ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
எங்கே மாராப்பு.. மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
பெ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு.. அருகே நீ வா.. வேணாம் வீராப்பு
...

பெ: நீர் போகும் வழியோடுதான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
ஆ: வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது
பெ: புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன
காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன
ஆ: மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு
பெ: ஆஹ்ஹா.. சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு..
ஆ: மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
...

பெ: ஓஹோஹோஹோ.. ஓஓஹோஹோ ஹோஹோ..
ஓ ஓஓஓ ஓ ஓஓஓ..
...

ஆ: என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல
பெ: நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்னை நம்பித்தானே ஒளிச்சு வச்சேன்
ஆ: பொல்லாப்பு வேணாம் புள்ள.. பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்கப் பாயும் இல்லை.. நீ வந்தா நியாயம் இல்ல
பெ: வேணாம் கூப்பாடு.. அருகே நீ வா.. ரோசாப் பூச்சூடு..

ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
பெ: நாநா நாநாநா.. லாலா லா லா.. லாலா லாலாலா

.

No comments: