படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடியவர் - பி. சுசீலா
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
.
3 comments:
மறக்க முடியாத படல்களில் இதுவும் ஒன்று. பி. சுசீலாவின் இனிமையான குரலை கேட்டுக் கொண்டே யிருக்கலாம்.
இது கடவுளை பற்றிய பாடல் போல் கவிஞர் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏதேனும் நமக்கு பிடித்த கடவுளை நினைத்து இந்த பாடலை பாடிப்பாருங்கள், அப்படியே அமைகிறது.
இது தலைவி தலைவனை இறைவனாக பாவித்து பாடுவதாகத்தான் இந்த பாடலை கவிஞர் அமைத்தள்ளார்.
இரண்டாவது சரணத்தில் அவர் அமைத்துள்ள வரிகள் அதனை சுட்டி காட்டுகிறது.
"காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே"
இதுதான் கவியரசர்
Post a Comment