Tuesday, August 24, 2010

உன்னை கண்டனே முதல் முறை நான்

படம் : பாரிஜாதம்
பாடியவர்க: ஹரி சரண், சுருதி



உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யோ .அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யோ ..சீ எனவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இன்னுமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஒ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்வு இது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
ஐந்தில் சொல்வது கேள் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொனாலே உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஒ காதல் எனை தாக்கிடுதே
செரி தான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாபிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்கே யாரும் இல்லையே
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைதேனே முற்றிலுமாய் தான்
ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் மூடி நின்றாய்
உன் உருவம் தானே என்னாளுமே முகில் தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்
கடவுள் நிலையாய் நம் கண்ணிலே காட்டு ம் காதல்
உன்னை கண்டேனே முதல் முறைநான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே
என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யோ .
அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகழ் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இன்னுமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஒ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்வு இது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
ஐந்தில் சொல்வது கேள் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொனாலே உள்ளே தித்திக்குமே
மனசுக்குள் ஏனோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் எதோ ஜல் ஜல்
இது சரி தான நீ சொல் சொல்
.

No comments: