Thursday, September 9, 2010

வசந்த கால கோலங்கள்

படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர் : ஜானகி



வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)

அலையில் ஆடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குள் என்ன உறவுகள்

உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

தேரில் ஏறும் முன்னரே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

3 comments:

அப்பாதுரை said...

அந்த நாளில் ஒலிக்காத இனிமை இப்பொழுது இந்தப் பாடலில் ஒலிப்பது ஏனென்று தெரியவில்லை; மறந்து போன பாடலை நினைவு படுத்தினீர்கள். நன்றி.

Anonymous said...

Antha naalilum iniththadhu. Intrum inikkirathu. Marakkamudiatha paadalkalil ontru intha paadal.

Anonymous said...

Antha naalilum iniththadhu. Intrum inikkirathu. Marakkamudiatha paadalkalil ontru intha paadal.