Friday, August 20, 2010

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

ஆ: காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள்.. உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெ: அந்திப்பூ விரியும்.. அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு கனியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்

ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

பெ:ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ஆ: லாலா லாலலாலா.. லாலலால லாலா..
பெ: தன்னோடுதான் போராடினாள்.. வேர்வைகளில் நீராடினாள்
ஆ: லாராரரா.. ராராரரா.. ராராரரா.. ராராரரா..
அன்பே ஆடை கொடு.. எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெ: இதழில் இதழால் ஒரு கடிதம் எழுது.. ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெ: மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
ஆ&பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
.

1 comment:

அப்பாதுரை said...

நன்றி. இதுவரை கேட்டதே இல்லை இந்தப் பாட்டை - நல்ல சந்தம். பாடலாசிரியர் யாரென்று தெரியுமா?