Tuesday, October 5, 2010

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்

பாடத்தைத் தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்தக் கோலத்துக்கு ஆரம்பப் புள்ளி வைப்போம்
பறவை போலப் பறந்து பறந்து
படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆட வைத்தால் தாமரைப் பூங்கொடி ஆடிடுமா

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு

மாமரச் சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை நான் உங்கள் பக்கத்திலே
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி.. தேனருவி.. ஆடிட வந்ததென் கைதழுவி

.

No comments: