Monday, October 11, 2010

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகிஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
.

1 comment:

logu.. said...

eppothum manathai thottu sellum pattu...

super..