Wednesday, July 14, 2010

தகிடததுமி தகிடததுமி தந்தானா ....

படம் : சலங்கை ஒலி
இசை : இசைஞானி
பாடியவர் : எஸ்.பி.பி
வரிகள் : வைரமுத்து




தகிடததுமி தகிடததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்

நீ தொடங்கும் போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழ்நீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து

இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம்(Baavam) உண்டு பாவம்(paavam) இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

.

No comments: