படம்: தில்லு முல்லு
இசை: எம் எஸ் விஸ்வனாதன்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
(ராகங்கள்)
கலைமாது தான்மீட்டும் இதமான வீணை
கனிவான சுவரம் பாடப் பதமானது
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுருதி கொண்ட வீணையம்மா
(ராகங்கள்)
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடிபோல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராகபாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா
(ராகங்கள்)
No comments:
Post a Comment