Sunday, July 25, 2010

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

பாடல்: என்னுள்ளே எங்கோ
படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இசைஞானி இளையராஜா




என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?

உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா(!)....

ஏன் நிறுத்திட்டீங்க(!)?....

இங்க ஒரு அழான இடம் இருக்கு...
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா...

என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ... ஆ... ஆ... ஆ.......
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையி லே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?

மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ... ஆ... ஆ...
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ?

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

No comments: