Saturday, July 31, 2010

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,

படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயற்றியவர் : புலமைப்பித்தன்
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

ஏ.... ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரி ராரோ ஆரி ராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ

பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.

.

No comments: